ரேணுகா சிங் (கோப்புப் படம்) 
செய்திகள்

ரேணுகா சிங் அபார பந்துவீச்சு: 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை!

இறுதிச்சுற்றில் இலங்கை அணி 16 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

DIN


இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணி 16 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

2022 மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன. தொடர்ச்சியாக 7-வது முறையாக ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. கடந்த 14 வருடங்கள் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணி விளையாடுவது இதுவே முதல்முறை.

சில்ஹெட்டில் நடைபெறும் இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் மாற்றம் எதுவுமில்லை. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவுக்குப் பதிலாக பேட்டர் தயாளன் ஹேமலதா இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 

3-வது ஓவரில் இலங்கை அணி கேப்டன் சமரி அத்தபத்து 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன. ரேணுகா சிங் வீசிய 4-வது ஓவரில் ஹர்ஷிதா, அனுஷ்கா, ஹாசினி என 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் இந்தியாவுக்குக் கிடைத்தன. அனுஷ்கா ரன் அவுட் ஆனார். இதன்பிறகு கவிஷாவை போல்ட் செய்தார் ரேணுகா. முதல் 5 விக்கெட்டுகளில் ரேணுகாவுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. இதனால் பவர்பிளேவின் முடிவில் 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது இலங்கை அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT