டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று: அயர்லாந்தை எளிதாக வீழ்த்திய ஜிம்பாப்வே!
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் அயர்லாந்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஜிம்பாப்வே அணி.
செய்திகள்டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று: அயர்லாந்தை எளிதாக வீழ்த்திய ஜிம்பாப்வே!
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் அயர்லாந்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஜிம்பாப்வே அணி.
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் அயர்லாந்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஜிம்பாப்வே அணி.
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று (முதல் சுற்று) ஆட்டத்தில் குரூப் பி பிரிவைச் சேர்ந்த ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகள் இன்று மோதின.முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் ராஸா 48 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்தார். அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே அளித்த இலக்கை விரட்ட முடியாமல் தடுமாறினார்கள் அயர்லாந்து பேட்டர்கள். முதல் 4 விக்கெட்டுகளை 22 ரன்களுக்கு இழந்ததால் ஆரம்பத்திலேயே அயர்லாந்தின் தோல்வி உறுதியானது. அதற்குப் பிறகும் ஜிம்பாப்வே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தைத் தன்வசமாக்கியது. அயர்லாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
குரூப் பி பிரிவைச் சேர்ந்த மற்றொரு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஸ்காட்லாந்து வீழ்த்தியது.