செய்திகள்

டிசம்பரில் வங்கதேசத்தில் விளையாடும் இந்திய அணி: அட்டவணை வெளியீடு!

இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

DIN

இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான அறிவிப்பை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்துக்குச் செல்லும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. நவம்பர் 18 முதல் நவம்பர் 30 வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கடுத்து வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. இதற்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. 

ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ல் தொடங்கி டிசம்பர் 10-ல் முடிவடைகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்றும் 2-வது டெஸ்ட் டிசம்பர் 22 அன்றும் தொடங்குகின்றன. 

இந்தியா - வங்கதேச அணிகள் பங்கேற்கும் தொடர்களின் அட்டவணை

டிசம்பர் 4: முதல் ஒருநாள், டாக்கா 
டிசம்பர் 7: 2-வது ஒருநாள், டாக்கா
டிசம்பர் 10: 3-வது ஒருநாள், டாக்கா
டிசம்பர் 14-18: முதல் டெஸ்ட், சட்டோகிராம் 
டிசம்பர் 22-26: 2-வது டெஸ்ட், டாக்கா 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT