குசால் மெண்டிஸ் (கோப்புப் படம்) 
செய்திகள்

கடைசி 10 ஓவர்களில் அசத்திய இலங்கை: நெதர்லாந்துக்கு 163 ரன்கள் இலக்கு!

இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. 

DIN

நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. 

குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து 2 வெற்றிகளையும் நமீபியா, இலங்கை தலா 1 வெற்றியையும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. குறைவான ரன்ரேட்டைக் கொண்டிருப்பதால் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலைமை நெதர்லாந்துக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிடும். இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து தோற்றுவிட்டால் நமீபியாவை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்த வேண்டும். இல்லாவிட்டால் நமீபியா சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.

இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சமீரா, பிரமோத் மதுஷனுக்குப் பதிலாக லஹிரு குமாரா, பினுரா இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

இலங்கை அணி பவர்பிளேயின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. 

7-வது ஓவரில் நெதர்லாந்து அணிக்கு இரு விக்கெட்டுகள் கிடைத்தன. பால் வான் மீகரன் முதலில் இலங்கை பேட்டர் பதும் நிசாங்காவை 14 ரன்களில் போல்ட் செய்தார். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். நடுவரின் தீர்ப்பை அவர் டிஆர்எஸ் முறையீடு செய்யவில்லை. ஆனால் அந்தப் பந்து லெக் ஸ்டம்பைத் தவறவிட்டது பிறகு தான் தெரிந்தது. இதனால் டிஆர்எஸ் முறையீடு செய்திருந்தால் தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார். 

இலங்கை அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஆட்டம் வேறு பாதையில் சென்றது. இலங்கை அணியை வழிநடத்தில் கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார் குசால் மெண்டிஸ். 

குசால் மெண்டிஸும் சரித் அசலங்காவும் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். அசலங்கா 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 34 பந்துகளில் குசால் மெண்டிஸ் அரை சதமெடுத்தார். 2 பவுண்டரிகள் அடித்த பனுகா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு கடைசிக்கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் இலங்கை பேட்டர்கள். 19-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் உள்பட 15 ரன்கள் கிடைத்தது. அதே ஓவரில் தசுன் ஷனகா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் இன்னிங்ஸை சீராகக் கொண்டு சென்ற குசால் மெண்டிஸ் 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்து நெதர்லாந்துக்கு நெருக்கடி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT