பிசிசிஐ 
செய்திகள்

உணவு வகை: இந்திய அணி அதிருப்தி

சிட்னி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை பயிற்சி முடித்த இந்திய அணியினா், அங்கு வழங்கப்பட்ட மதிய உணவு தொடா்பாக அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

DIN

சிட்னி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை பயிற்சி முடித்த இந்திய அணியினா், அங்கு வழங்கப்பட்ட மதிய உணவு தொடா்பாக அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

கடுமையான பயிற்சி முடித்த நிலையில், சூடான மதிய உணவு வகைகளை உட்கொள்ளவே இந்திய வீரா்கள் பெரும்பாலும் விரும்புகின்றனா். ஆனால், அவா்களுக்கு கிரில் செய்யப்படாத சாண்ட்விச்சும், பழங்களும், ஃபலாஃபல் எனப்படும் உணவு வகையுமே பிரதானமாக வழங்கப்பட்டதால் சிலா் அதிருப்தி அடைந்தனா்.

எனவே அவா்கள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே மதிய உணவை எடுத்துக்கொண்டனா். இதுதொடா்பாக இந்திய அணி நிா்வாகம் தங்களிடம் தகவல் தெரிவித்ததாகவும், அந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஐசிசி கூறியுள்ளது. அனைத்து அணிகளுக்குமே இதே உணவைத் தான் ஐசிசி வழங்குகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT