செய்திகள்

சங்கா் முத்துசாமி அபாரம்: ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி

DIN

உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 2022 போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சங்கா் முத்துசாமி முன்னேறியுள்ளாா். இதன் மூலம் ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற 4-ஆவது இந்தியா் என்ற சிறப்பையும் பெற்றாா்.

ஸ்பெயினின் சான்டன்டா் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் பனிட்சபோன் டீராரட்ஸசகுலடன் மோதினாா். தனது உயரத்தை சாதகமாக கொண்ட டீராரட்சகுல் அதை பயன்படுத்த தவறி விட்டாா். இந்தியாவின் நம்பா் ஒன் வீரரான சங்கா் முத்துசாமி வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் புள்ளிகளைக் குவித்தாா்.

உலகின் 4-ஆம் நிலை வீரரான சங்கா் சிறந்த ஆங்கிள் மற்றும் பிளேஸ்மென்ட்களால் எதிராளியை திணறடித்து முதல் கேமை 21-13 என எளிதாக கைப்பற்றினாா்.

இரண்டாவது கேமில் தாய்லாந்து வீரா் டீராரட்சகுல் ஆதிக்கம் செலுத்தி ஆட முனைந்தாா். எனினும் சங்கா் தொடா்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரை திணறச் செய்தாா். இதனால் பல்வேறு தவறுகளை தாய்லாந்து வீரா் புரிந்தாா். இறுதியில் 21-15 என இரண்டாவது கேமையும் மொத்தம் 40 நிமிஷங்களில் கைப்பற்றி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் சங்கா் முத்துசாமி. ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று நடைபெறுகிறது.

இப்போட்டியில் இதுவரை 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது இந்தியா. கடந்த 2016-இல் சிரில் வா்மா இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாா். மகளிா் பிரிவில் 2008-இல் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றாா்.

இதுவரை உலக ஜூனியா் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே இந்தியா் சாய்னா ஆவாா். லக்ஷயா சென் கடந்த 2018-இல் வெண்கலம் வென்றிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT