செய்திகள்

மீண்டும் முதலிடத்தில் ஹைதராபாத் எஃப்சி

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) இல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத் எஃப்சி அணி.

DIN

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) இல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத் எஃப்சி அணி.

ஹைதராபாதில் சனிக்கிழமை இரவு ஹைரதாபாத் எஃப்சி- எஃப்சி கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.

இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை தோற்காத அணிகள் என்ற பெருமையுடன் களத்தில் இறங்கின. சொந்த மைதானத்தில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தது.

10-ஆவது நிமிஷத்தில் நைஜீரிய வீரா் பாா்த்தோலோமியு கடத்தி அனுப்பிய பந்தை பிசகாமல் கோலாக்கினாா் ஹைதராபாத் வீரா்

ஜேவியா் சிவெரியோ. முதல் பாதியில் பந்தை பெரும்பாலும் தன் வசம் வைத்திருந்த கோவா அணியால் கோல் போட முடியவில்லை.

இரண்டாம் பாதியில் 83-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்காமல் கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தாா் அதன் வீரா் அல்வரோ வாஸ்கீஸ்.

கூடுதல் நிமிஷத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டாா் எடு பெடியா. இறுதியில் 1-0 என வெற்றி பெற்ற ஹைதராபாத் 10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. எஃப்சி கோவா அணி 4-ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT