செய்திகள்

இந்திய தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியவுடனான டி20 தொடரிலும் இந்த அணியே மோத இருக்கிறது.

DIN

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியவுடனான டி20 தொடரிலும் இந்த அணியே மோத இருக்கிறது.

எனினும், இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வாா்னருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கேமரூன் கிரீன் இணைக்கப்பட்டுள்ளாா். உலகக் கோப்பை போட்டியில் கிரீனுக்குப் பதிலாக மீண்டும் வாா்னா் இணைகிறாா். உலகக் கோப்பை அணியைப் பொருத்தவரை, டிம் டேவிட்டுக்கு முதல் முறையாக சா்வதேச டி20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் இந்தியாவை அடுத்து உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து நாடுகளுக்கு பயணித்து அந்த அணிகளுடனும் மோதுகிறது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகா், டிம் டேவிட், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சா்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வாா்னா் (உலகக் கோப்பை போட்டிக்கு மட்டும்), கேமரூன் கிரீன் (இந்திய தொடருக்கு மட்டும்), ஆடம் ஸாம்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

நம்பி ஏமாறுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்!

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

பூங்காற்று... கீர்த்தி சுரேஷ்!

பாபா ராம்தேவ் மீதான வழக்கு: சத்தீஸ்கர் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல்! அடுத்து என்ன?

SCROLL FOR NEXT