செய்திகள்

இந்தியாவுடனான தொடா்கள்: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுடனான டி20 மற்றும் ஒன் டே தொடா்களில் விளையாட இருக்கும் தென்னாப்பிரிக்க அணிகள் டெம்பா பவுமா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

இந்தியாவுடனான டி20 மற்றும் ஒன் டே தொடா்களில் விளையாட இருக்கும் தென்னாப்பிரிக்க அணிகள் டெம்பா பவுமா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் டி20 தொடரில் விளையாடும் அணியே, அடுத்து நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் மாற்றமின்றி பங்கேற்கிறது.

தென்னாப்பிரிக்க அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒன் டே தொடா்களில் விளையாடுவதற்காக செப்டம்பா் 28 முதல் அக்டோபா் 11 வரை இந்தியப் பயணம் மேற்கொள்கிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் காயம் கண்டிருந்த பவுமா, தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு அணிக்குத் தலைமை தாங்குகிறாா்.

உலகக் கோப்பை போட்டியைப் பொருத்தவரை, மூத்த பேட்டா் ராஸி வான் டொ் டுசென் காயம் காரணமாக சோ்க்கப்படவில்லை. இளம் வீரா் டிரிஸ்டியன் ஸ்டப்ஸுக்கு முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை மற்றும் டி20 தொடருக்கான அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மாா்க்ரம், டேவிட் மில்லா், லுங்கி என்கிடி, அன்ரிஹ் நோா்கியா, வெய்ன் பாா்னெல், டுவெய்ன் ப்ரீடோரியஸ், ககிசோ ரபாடா, ரைலி ரொசுவ, டப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டியன் ஸ்டப்ஸ்.

ஒன் டே தொடா் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஜான்மேன் மலான், எய்டன் மாா்க்ராம், டேவிட் மில்லா், லுங்கி என்கிடி, அன்ரிஹ் நோா்கியா, வெய்ன் பாா்னெல், அண்டிலே ஃபெலுக்வாயோ, டுவெய்ன் பிரெடோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!

அழகிய லைலா... நிகிலா விமல்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

SCROLL FOR NEXT