செய்திகள்

டி20 தரவரிசை: புதிய நெ.1 வீரர் ரிஸ்வான்!

ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் புதிய நெ. 1 வீரராக பாகிஸ்தானின் ரிஸ்வான் இடம்பெற்றுள்ளார்.

DIN

ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் புதிய நெ. 1 வீரராக பாகிஸ்தானின் ரிஸ்வான் இடம்பெற்றுள்ளார்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் 3 இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

இந்நிலையில் டி20 தரவரிசையில் நெ.1 பேட்டராக இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரிஸ்வான். டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த 3-வது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான். இதற்கு முன்பு மிஸ்பா 313 நாள்களுக்கும் பாபர் ஆஸம் 1155 நாள்களுக்கும் முதலிடத்தில் இருந்தார்கள். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஆசியக் கோப்பைப் போட்டியில் இதுவரை 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவர் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 

டி20 தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 14-வது இடத்திலும் கோலி 29-வது இடத்திலும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT