செய்திகள்

ஆப்கன் - பாகிஸ்தான் போட்டியில் மோதல்: ஒருபுறம் வீரர்கள்; மறுபுறம் ரசிகர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சோ்க்க, அடுத்து பாகிஸ்தான் 19.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இருக்கைகள் மற்றும் பொருள்களை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர்.

மேலும், மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மீது இருக்கைகளை கொண்டு தாக்கியதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து, இரு தரப்பினரும் மைதானத்திற்கு வெளியே சாலைகளில் மோதிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலரை அடையாளம் கண்டுள்ள ஷார்ஜா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டமிழந்து வெளியேறும் தன்னை சீண்டிய ஆப்கானிஸ்தான் பெளலர் ஃபரீத் அகமதை பேட்டை ஓங்கி மிரட்டும் பாகிஸ்தானின் ஆசிஃப் அலி. முன்னதாக, அகமது வீசிய பந்தில் அலி சிக்ஸர் விளாசிய பிறகு அவரை சீண்டினார். அதற்குப் பதிலாகவே தனது பெளலிங்கில் அலி வீழ்ந்ததும் அகமது அவரைச் சீண்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநிலங்களவையில் கார்கே - நட்டா இடையே வாக்குவாதம்!

நாடாளுமன்றத்துக்கு மோடி வருவாரா? எம்பிக்களுடன் ராகுல் ஆலோசனை!

மத்திய பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஊழல் தடுப்புச் சட்டம்,1988 - ஒரு பார்வை!!

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT