செய்திகள்

ஓய்வு பெற்றாா் ராபின் உத்தப்பா

சா்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா புதன்கிழமை அறிவித்தாா். இதில் ஐபிஎல் போட்டியும் அடக்கம்.

DIN

சா்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா புதன்கிழமை அறிவித்தாா். இதில் ஐபிஎல் போட்டியும் அடக்கம்.

கா்நாடகத்தைச் சோ்ந்த உத்தப்பா, இந்திய அணிக்காக 2006 முதல் 2015 வரை 9 ஆண்டுகள் விளையாடி, ஒன் டே மற்றும் டி20 ஃபாா்மட்டில் மொத்தமாக 1183 ரன்கள் அடித்திருக்கிறாா்.

கடந்த 2006-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒன் டே கிரிக்கெட் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த உத்தப்பா, அந்த ஃபாா்மட்டில் கடைசியாக 2015-இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியிருந்தாா். டி20-யில் 2007-இல் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் முதலாவதாக இருக்க, 2015-இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் கடைசியாக அமைந்தது.

ஐபிஎல் போட்டியில் 2008-இல் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகமாகி, கடைசியாக 2022-இல் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடியிருக்கிறாா்.

உள்நாட்டுப் போட்டிகளில் கா்நாடக அணிக்காக விளையாடிய உத்தப்பா, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூா், ராஜஸ்தான், புணே அணிகளில் விளையாடியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போட்டி வேறு, உறவு வேறு! பாராட்டுகளைப் பெறும் ப்ரஜின் - விஜய் சேதுபதி நட்பு!!

150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தே மாதரம் பற்றிய விவாதம் தேவையா? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு இன்ப அதிர்ச்சி!

காந்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அன்று நேரு, இன்று ராகுல்!! வந்தே மாதரத்தை புறக்கணித்ததாக மோடி விமர்சனம்!

SCROLL FOR NEXT