செய்திகள்

ஜடேஜா வெளியிட்ட புகைப்படம்: ரசிகர்கள் ஆதங்கம்!

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத ஜடேஜா தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

DIN

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத ஜடேஜா தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவரால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற முடியாமல் போனது. இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் ஊன்றுகோலின் உதவியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜடேஜா. ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டியவருக்கு இந்த நிலைமையா எனத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT