செய்திகள்

இதையெல்லாம் யாரும் அலசுவதில்லை : கே.எல். ராகுல் ஆதங்கம்

டி20 கிரிக்கெட்டில் விரைவாக ரன்கள் எடுக்க முயன்று வருவதாக இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் கூறியுள்ளார்.

DIN

டி20 கிரிக்கெட்டில் விரைவாக ரன்கள் எடுக்க முயன்று வருவதாக இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் மொஹலியில் இன்று நடைபெறுகிறது. ஆசியக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாத இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராகத் தலா 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது.  

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் கூறியதாவது:

பவர்பிளே பகுதியில் விரைவாக ரன்கள் எடுக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு வீரரும் எண்ணுவார்கள். யாரும் சரியான கிரிக்கெட் வீரர் கிடையாது. ஓய்வறையில் உள்ள எந்த வீரரும் அப்படி இல்லை. ஓர் அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு அளிக்கப்படும். அதேசமயம் ஒட்டுமொத்தமாக ஒரு வீரரின் ஸ்டிரைக் ரேட் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒருவர் எதற்காக அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார் என்பது யாருக்கும் தெரியாது. அல்லது 100-120 ஸ்டிரைக் ரேட்டிலும் ஓர் அணி வெற்றி பெற்றிருக்கும். இதையெல்லாம் யாரும் அலசுவதில்லை. எனவே இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பார்த்தால் மெதுவாக விளையாடியது போல் தான் இருக்கும். விரைவாக ரன்கள் எடுத்து அதிக ஸ்டிரைக் ரேட்டை வைத்துக்கொள்ள நானும் முயன்று வருகிறேன். கடந்த 10-12 மாதங்களாக ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை எல்லா வீரர்களும் உணர்ந்துள்ளார்கள். ஒரு தொடக்க வீரராக என்னை எப்படி மேம்படுத்திக்கொள்ள முடியும் என எப்போதும் எண்ணுவேன். நீண்ட நாள் கழித்து சொந்த மண்ணில் விளையாடவுள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்டில் இயல்பு வாழ்க்கை முடங்கியது: கனமழைக்கு 5 பேர் பலி!

உலகின் கடைசி சாலை முடியும் இடம்! அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லையாம்!!

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா! அதிகாரபூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT