செய்திகள்

டிரா செய்த பிரக்ஞானந்தா: கைத்தட்டி பாராட்டிய கார்ல்சன்!

கார்ல்சனுடனான ஆட்டத்தை டிரா செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. 

DIN

கார்ல்சனுடனான ஆட்டத்தை டிரா செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. 

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். 

முதல் நாளன்று இந்தியாவின் பிரக்ஞானந்தா - இவான்சுக், டுடா, ஜெல்ஃபண்ட் என மூன்று பிரபல வீரர்களை வீழ்த்தினார். எனினும் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டோபர் யூவிடம் தோற்றார். முதல் நாள் முடிவில் கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பிரக்ஞானந்தா, இவான்சுக், ஹான்ஸ் நீமன், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் இருந்தார்கள்.

2-வது நாளன்று அனைவரும் எதிர்பார்த்த கார்ல்சனுடனான ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா. கடைசி வரை கடுமையாகப் போராடிய பிரக்ஞானந்தாவுக்கு இறுதியில் கைத்தட்டிப் பாராட்டு தெரிவித்தார் கார்ல்சன். இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. 2-ம் நாளன்று ஒரு வெற்றி, 3 டிரா என ஓரளவு நன்றாகவே விளையாடினார் பிரக்ஞானந்தா. 

2-வது நாள் முடிவில் இந்திய வீரர்களான அர்ஜுன் எரிகைசியும் பிரக்ஞானந்தாவும் முதல் இரு இடங்களைக் கைப்பற்றியுள்ளார்கள். 17 புள்ளிகளுடன் அர்ஜுன் முதலிடத்திலும் 15 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, கார்ல்சன் ஆகியோர் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT