செய்திகள்

ஷர்துல் அபார பந்துவீச்சு: நியூசி. ஏ அணியை வீழ்த்திய இந்திய ஏ அணி

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வென்றுள்ளது.

DIN

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வென்றுள்ளது.

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. 

ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து ஏ அணி 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மைக்கேல் ரிப்பன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளும் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

இந்திய ஏ அணி சிறப்பாக பேட்டிங் செய்து 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் 41, திரிபாதி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். சஞ்சு சாம்சன் 29, ரஜத் படிதார் 45 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT