செய்திகள்

பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் திட்டமிட்டபடி தொடங்கியது எப்படி?

DIN

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் திட்டமிட்டப்படி ராவல்பிண்டியில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்காக ராவல்பிண்டியில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென 8 வீரர்கள் உள்பட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்கள். வாந்தியும் வயிற்றுப் போக்கும் வீரர்களுக்கு ஏற்பட்டது. வைரஸ் தொற்று காரணமாக 14 பேரும் பாதிக்கப்பட்டதாக அறியப்பட்டது. எனினும் யாருக்கும் கரோனா இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் வியாழக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமை தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஒரு வீரரைத் தவிர அனைவரும் உடல்நலம் தேறிவிட்டதால் திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று காலை மருத்துவர்கள் அனைவரையும் பரிசோதித்து இங்கிலாந்து அணியால் உடற்தகுதியுள்ள 11 பேரை களமிறக்க முடியும் என்பதை உறுதி செய்தார்கள். இதனால் முதல் டெஸ்ட் எவ்விதத் தாமதமும் இன்றி தொடங்கியது. போக்ஸுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் தேர்வாகியுள்ளார். போப் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார். வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் உள்பட நான்கு பேர் அறிமுகமாகியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT