பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்: அறிவிப்பு
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6-ம் இடத்தைப் பிடித்தது. 2020, 2019 ஆண்டுகளிலும் அதே இடத்தைப் பிடித்தது. கடந்த வருடம் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் இந்த வருடம் லக்னெள அணியில் இடம்பெற்று அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 2018 முதல் அந்த அணியில் மயங்க் அகர்வால் இடம்பெற்று அதிக ரன்களைக் குவித்து வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் ஷிகர் தவன், ஜான் பேர்ஸ்டோ, ஷாருக் கான், ரபாடா ஆகிய முக்கியமான வீரர்களை பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது.