முகப்பு
செய்திகள்

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

செய்திகள்

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் இன்று (சனிக்கிழமை) மோதினர்.

இதில் ஸ்வியாடெக் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அதே ஆதிக்கத்தைத் தொடர்ந்த ஸ்வியாடெக் 6-3 என்ற கணக்கில் வென்று 6-1, 6-3 என்கிற நேர் செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஸ்வியாடெக் இரண்டாவது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக 35-வது வெற்றியையும் அவர் பெற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →