செய்திகள்

எத்தனை!: அரையிறுதியிலும் சதமெடுத்த ருதுராஜ் கெயிக்வாட்!

DIN

விஜய் ஹசாரே போட்டியின் அரையிறுதியில் அஸ்ஸாம் அணிக்கு எதிராகச் சதமடித்து அசத்தியுள்ளார் மஹாராஷ்டிர அணியின் கேப்ட்ன் ருதுராஜ் கெயிக்வாட்.

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற அஸ்ஸாம் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காலிறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களுடன் இரட்டைச் சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெயிக்வாட் இன்றும் அபாரமாக விளையாடினார். 126 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் எடுத்து 45-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அன்கித் பாவ்னே, 89 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்தார். இதனால் மஹாராஷ்டிர அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது. முக்தா உசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 9 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 6 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ். அதன் விவரங்கள்:

136 vs மத்தியப் பிரதேசம்
154* vs சத்தீஸ்கர் 
124 vs கேரளம் 
21 vs உத்தரகண்ட் 
168 vs சண்டிகர் 
124* vs ரெயில்வே 
40 vs பெங்கால் 
220* vs உத்தரப் பிரதேசம்
168 vs அஸ்ஸாம் (இன்று)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT