செய்திகள்

'தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே வெற்றி வாசத்துல..' - சொன்னது யார் தெரியுமா?

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

DIN

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'மதுரைல சொல்லுவாங்க யாரா இரு.. எவனா இரு.. Line-ல கரெக்டா இருன்னு. அதுவே சென்னைன்னு வந்துட்டா யாரா இரு.. எவனா இரு "Lion" கிட்ட கரெக்ட்டா இரு.. தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே  வெற்றி வாசத்துல' என்று பதிவிட்டுள்ளார்.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24 வது லீக் போட்டி, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT