செய்திகள்

ஐபிஎல்: புதிய சாதனை நிகழ்த்தவுள்ள ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனையை இன்று நிகழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

DIN

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் சர்மா.  மும்பை இந்தியன்ஸ் கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. 

புள்ளிப் பட்டியலில் 6வது, 7வது இடத்தில் இருக்கும் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் இன்று மாலை 7.30 மணிக்கு பலப்பரீட்சை செய்ய உள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்து சாதனை படைத்த ரோஹித் சர்மா இன்றும் மற்றுமொரு புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது. அதாவது 250 சிக்ஸர்கள் அடிக்க இன்னும் 3 சிக்ஸர்கள் தேவை. இதுவரை 247 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 3 சிக்ஸர்கள் அடித்தால் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்தியர் என்ற பெருமையை அடைவார். 

அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. கிறிஸ் கெயில்- 357 சிக்ஸர்கள் (மே.இ. தீவுகள்) 
  2. ஏபிடி வில்லியர்ஸ்- 251 சிக்ஸர்கள் (தென்னாப்பிரிக்கா) 
  3. ரோஹித் சர்மா- 247 சிக்ஸர்கள் (இந்தியா) 
  4. எம்.எஸ். தோனி- 235 சிக்ஸர்கள் (இந்தியா) 
  5. விராட் கோலி- 229 சிக்ஸர்கள் (இந்தியா) 
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT