செய்திகள்

எனது சிறந்த ஆட்டம் இனிமேல்தான் வரும்: ஆட்ட நாயகன் ரஹானே 

நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை பெற்ற சிஎஸ்கே அணியின் வீரர் ரஹானேயின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-ஆவது ஆட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பா் கிங்ஸ் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

முதலில் ஆடிய சென்னை 235/4 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய கொல்கத்தா அணி 186/8 ரன்களை மட்டுமே சோ்த்தது. ஷிவம் துபே, டேவன் கான்வே ஆகியோா் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.

ரஹானே விஸ்வரூபம் 71: மறுமுனையில் நிலைத்து ஆடி வந்த ரஹானே 5 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 71 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தாா். 244 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினார். கேப்டன் தோனி 2 ரன்களுடன் அவருக்கு துணையாக நின்றாா். 19-ஆவது ஓவரில் 2 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்களை விளாசினாா் ரஹானே.

முன்னெப்போதும் விட இந்த வருடம் ரஹானே அற்புதமாக விளையாடி வருவது அனைவரும் அறிந்ததே. அவரது சிறந்த ஆடத்திற்குப் பிறகு ஆட்ட நாயகான் விருதினை பெற்றார். அப்போது ரஹானே கூறியதாவது: 

மூளையும் மனதும் சரியாக வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகும். நான் என்னுடைய விளையாட்டை மிகவும் ரசித்து விளையாடுகிறேன். நல்ல தொடக்கம் கிடைத்தது; அதை தொடர நானும் விளையாடினேன். 

இதுதான் சிறந்தது என இல்லை. நான் விளையாடிய அனைத்துப் போட்டிகளுமே பிடிக்கும்.என்னுடைய சிறந்த போட்டி இனிமேல்தான் வருமென நம்பிக்கையில் இருக்கிறேன். தோனி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நன்றாக விளையாடாதபோது தோனியின் அறிவுரை மிகவும் உதவியாக இருக்கும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

தெய்வ தரிசனம்... குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீக்கும் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர்!

Dinamani வார ராசிபலன்! | Aug 31 முதல் Sep 06 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT