செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி அறிவிப்பு: மீண்டும் ரஹானே!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

லண்டனிலுள்ள தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகின்றது.

இந்தப் போட்டியில் டெஸ்ட் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் விலகியதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில், இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா(கேப்டன்), கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎல் ராகுல், கே.எஸ்.பரத்(விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், சர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தற்காலிக ஊழியா்கள் பணி நிரந்தர விவகாரம்: சுகாதாரத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம்: தெலங்கானா பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

கரோனாவால் இறந்த மருத்துவரின் மனைவிக்கு அரசுப் பணி: 5 ஆண்டுகளாக அலைக்கழிப்பு

சவூதியில் பேருந்து விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியா்கள் உயிரிழப்பு!

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி: ரூ.7,172 கோடி முதலீட்டில் 17 திட்டங்கள்- மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT