செய்திகள்

குர்பாஸ் அதிரடி: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 180 ரன்கள் இலக்கு

DIN

குஜராத் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, கொல்கத்தா முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நாராயண் ஜகதீசன் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர். இந்த ஜோடி கொல்கத்தாவுக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. ஜகதீசன் 15 பந்துகளில் 19 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் களம் கண்ட ஷர்துல் தாக்குர் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின் களமிறங்கிய கொல்கத்தா வீரர்களில் ரசல் தவிர வேறு யாரும் அதிக அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. கொல்கத்தா அணியின் வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த போதிலும் அந்த அணியில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய குர்பாஸ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்க விட்டார். அவர் 39 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ரசல் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜோஸ்வா லிட்டில் மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

SCROLL FOR NEXT