செய்திகள்

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 198 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சன் ரைசர்ஸ்

DIN

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்துள்ளது.

தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. மயங்க் அகர்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின் ராகுல் திரிபாதி (10 ரன்கள்), அய்டன் மார்கரம் (8 ரன்கள்) மற்றும் ஹாரி ப்ரூக் (0 ரன்கள்) ஆட்டமிழந்ததால் சன் ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அந்த அணி 83 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாகவே விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் க்ளாசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதிரடியாக விளையாடிய க்ளாசன் 27 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேப்பிடல்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அவள் அப்படித்தான்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

குடிநீரில் தேனடை: மனிதக்கழிவு என புகார்!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

SCROLL FOR NEXT