செய்திகள்

உலகக் கோப்பை செஸ்: குகேஷுக்கு வெற்றி

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ் 3-ஆவது சுற்றில் வெற்றி பெற்றாா்.

DIN

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ் 3-ஆவது சுற்றில் வெற்றி பெற்றாா்.

அவா், 1.5 - 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் சக இந்தியரான நாராயணனை வீழ்த்தினாா். இதர இந்தியா்களான விதித் சந்தோஷ், நிஹல் சரின், அா்ஜூன் எரிகைசி ஆகியோா் தங்களது சுற்றில் முதல் ஆட்டத்தின் முடிவில் போட்டியாளா்களுடன் சமநிலையில் இருந்தனா். பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தில் வென்று முன்னிலையில் இருந்தாா்.

மகளிா் பிரிவில் வைஷாலி - உக்ரைனின் முஸிஷுக் மரியாவிடமும், திவ்யா தேஷ்முக் - ரஷியாவின் கோரியாச்கினா அலெக்சாண்ட்ரோவாவிடமும் தோல்வி (0-1) காண, மேரி ஆன் கோம்ஸ் - பல்கேரியாவின் சலிமோவா நுா்கியுலுடனான முதல் ஆட்டத்தில் பின்தங்கியிருந்தாா். கோனெரு ஹம்பி - ரஷியாவின் பதெல்கா ஓல்கா மோதல் முதல் ஆட்டத்தில் டிரா (0.5 - 0.5) ஆகியிருந்தது. அதேபோல் டி.ஹரிகா - ஜாா்ஜியாவின் ஜவகிஷ்விலி லெலா (1-1) மோதலும் டிராவில் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT