செய்திகள்

யுவராஜ் சிங் ஓய்வுக்குப் பிறகு தொடங்கிய பிரச்னை இன்னும் முடியவில்லை: ரோஹித் சர்மா

யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதிலிருந்து இந்திய அணியில் முக்கியமான 4-ஆம் இடத்தில் களமிறங்க சரியான பேட்ஸ்மேன் அமையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதிலிருந்து இந்திய அணியில் முக்கியமான 4-ஆம் இடத்தில் களமிறங்க சரியான பேட்ஸ்மேன் அமையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. ஐசிசி நடத்தும் போட்டிகளில் கடைசியாக இந்திய அணி கடந்த 2013 ஆம் ஆண்டு வென்றிருந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகள் ஆகியும் இந்திய அணியினால் இதுவரை ஐசிசி நடத்தும் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்க உள்ளது. 

இந்த நிலையில், யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதிலிருந்து இந்திய அணியில் முக்கியமான 4-ஆம் இடத்தில் களமிறங்க சரியான பேட்ஸ்மேன் அமையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் 4-வது இடத்தில் களமிறங்கும் வீரருக்கான தேடல் நீண்ட நாள்களாக தொடர்கிறது. யுவராஜ் சிங்குக்கு பிறகு 4-வது இடத்தில் களமிறங்குவதற்கு யாரும் சரியாக அமையவில்லை. ஆனால், அந்த இடத்தில் நீண்ட நாள்களாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார். அவர் இதுவரை சிறப்பாக விளையாடியுள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் நூலகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டவா் கைது

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

SCROLL FOR NEXT