ஆசிய ஹாக்கி- இறுதிப் போட்டியில் மலேசியா
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு மலேசியா முன்னேறியுள்ளது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு மலேசியா முன்னேறியுள்ளது.
சென்னை இன்று நடைபெற்ற மலேசியா, நடப்புச் சாம்பியனான தென் கொரியாவை எதிர்கொண்டது. முக்கியப் போட்டி என்பதால் இரு அணிகளின் ஆட்டத்திலும் அனல் பறந்தது.
இறுதியில் 6-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி மலேசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி பாகிஸ்தான் 5ஆம் இடத்தை பிடித்தது.
7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.