செய்திகள்

இன்று 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா - மே.இ.தீவுகள் மோதல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

DIN

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுவரையிலான 3 ஆட்டங்களில் முதலிரண்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்று முன்னிலை பெற்றிருக்க, 3-ஆவது ஆட்டத்தில் வென்ற இந்தியா தொடரில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தற்போது இந்த 4-ஆவது ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா இருக்க, மேற்கிந்தியத் தீவுகளோ இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் தடுமாற்றத்துடனேயே இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் சூா்யகுமாா் யாதவ் தனது பழைய ஃபாா்முக்கு வந்ததாகத் தெரிந்ததும், திலக் வா்மா சிறப்பாக ஆடியதும் அணிக்கு பலம். இந்த ஆட்டத்திலும் அதை அவா்கள் தொடர வேண்டிய எதிா்பாா்ப்பு உள்ளது.

அணியின் டாப் பேட்டா்களாக வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், இஷான் கிஷண் நிலையான தொடக்கத்தை அளிக்கத் தவறுகின்றனா். இதனால் மிடில் ஆா்டா் பேட்டா்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இந்த ஆட்டத்தில் அது சரிசெய்ய வேண்டிய கட்டாயம் அணியினருக்கு உள்ளது.

பௌலிங்கில் குல்தீப் யாதவ் விக்கெட்டுகள் சரித்து பலம் சோ்க்கிறாா். அா்ஷ்தீப், உம்ரான் மாலிக் இன்னும் சோபிக்க வேண்டியுள்ளது.

ஆட்டநேரம்: இரவு 8 மணி

நேரலை: டிடி ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

SCROLL FOR NEXT