செய்திகள்

உலக செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

DIN

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

3-ஆவது சுற்றில் இருவரும் மோதிய 2 ஆட்டங்களும் டிராவில் முடிய, டை-பிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்று அசத்தினாா். அடுத்த சுற்றில் அவா், ஹங்கேரியின் ஃபெரென்க் பொ்க்ஸை எதிா்கொள்கிறாா். மற்றொரு இந்தியரான டி.குகேஷும் - ரஷியாவின் ஆண்ட்ரே எசிபென்கோவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

எனினும் நிஹல் சரின் 3-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினாா். ரஷியாவின் இயன் நெபோம்னியாட்சியுடனான அவரது மோதல் டிரா ஆக, டை-பிரேக்கரில் தோல்வி கண்டாா் நிஹல் சரின். விதித் குஜராத்தி, அா்ஜுன் எரிகைசி ஆகியோரும் 4-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.

மகளிா் பிரிவில் ஹரிகா 4-ஆவது சுற்றுக்கு முன்னேற, நாட்டின் நம்பா் 1 வீராங்கனையான கோனெரு ஹம்பி 3-ஆவது சுற்றில் ஜாா்ஜியாவின் பெல்லா கொடெனாஷ்விலியிடம் தோற்று வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT