செய்திகள்

ரோஹித்-ராகுல் சாதனையை சமன்செய்த ஜெய்ஸ்வால்-கில்!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய  அணியின் தொடக்க வீரர்கள் எடுத்த அதிகபட்ச சாதனையை சமன்செய்துள்ளார்கள் கில்-ஜெய்ஸ்வால். 

DIN

4-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மே.இ.தீ. அணி 178/8 ரன்கள் எடுத்து. அடுத்து ஆடிய இந்தியா 17 ஓவர்களில் 179/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 84 ரன்களும் திலக் வர்மா 7 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். கில் 47 பந்துகளில் 77 அடித்து எடுத்து அவுட்டானார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-2 என இந்திய அணி சமன் செய்துள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்-ராகுல் ஜோடி 165 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ரன்களாகும். இந்த சாதனையை சமன்செய்துள்ளார்கள் இளம் ஜோடிகளான ஜெய்ஸ்வால்- கில். 

டி20களில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய அணி தொடக்க வீரர்கள் பட்டியல்: 

  1. ரோஹித்- ராகுல் :165 ரன்கள் 
  2. ஜெய்ஸ்வால்- கில்: 165 ரன்கள் 
  3. ரோஹித்- தவான்: 160 ரன்கள் 
  4. ரோஹித்- தவான்: 158 ரன்கள் 
  5. ரோஹித்- ராகுல்: 140 ரன்கள் 
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT