ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் மாதம் 5ஆம் நாள் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடைபெறும் ஒருநாள் போட்டிகள் முக்கியத்துவம் பெருகின்றன.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டிகள் ஆக.30 முதல் செப்.3 வரை நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் செப்.7 முதல் செப்.12 வரை நடைபெற உள்ளன.
டி20 அணி:
எய்டன் மார்கரம் (கேப்டன்), டெம்பா பவுமா, மேத்திவ் ப்ரீட்ஜ்கே, டெவால்ட் ப்ரிவிஸ், ஜெரால்ட் கோட்ஜீ, டொனோவன் பெர்ரிரா, ஜோர்ன் போர்டுன், ரீஜா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், சிசாண்டா மகாலா, கேஷவ் மகாராஜா, லுங்கி நெகிடி, ஷம்சி, ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், வான் டர் டுஸ்ஸென்.
ஒருநாள் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டெவால்ட் ப்ரிவிஸ், ஜெரால்ட் கோட்ஜீ, டீ காக், ஜோர்ன் போர்டுன், ரீஜா ஹெண்ட்ரிக்ஸ், சிசாண்டா மகாலா, கேசவ் மகராஜ், எய்டன் மார்கரம், டேவிட் மில்லர், லுங்கி நெகிடி, ஆன்ரிச் நோர்கியா, ஷம்சி, வெய்ன் பர்னெல், ககிசோ ரபாடா, ஸ்டப்ஸ், வான் டர் டுஸ்ஸென்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.