செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் சாம்பியன்!

DIN

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயின் வீராங்கனை ஒல்கா கார்மோனா கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளார். 

உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி சிட்னியில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்வீடன் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

SCROLL FOR NEXT