செய்திகள்

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!

DIN

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பந்து வீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக் செவ்வாய்க்கிழமை(உள்ளூர் நேரப்படி) காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக்(வயது 49), தென் ஆப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

1990 முதல் 2005-ஆம் ஆண்டு வரை ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக் அந்த காலகட்டத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.

ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளில் 1,990 ரன்களும், 216 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அதேபோல், 189 ஒருநாள் போட்டிகளில் 2,942 ரன்களும், 239 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஜிம்பாப்வே, வங்கதேசம் சர்வதேச கிரிக்கெட் அணிக்கும், ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக ஹீத் பணியாற்றியுள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவுக்கு பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT