செய்திகள்

யுவராஜ் சிங்கிற்கு பெண் குழந்தை பிறந்தது

யுவராஜ் சிங், ஹேசல் கீச் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. 

DIN

யுவராஜ் சிங், ஹேசல் கீச் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் அறிவித்துள்ளார். மேலும் குட்டி இளவரசியை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைக்கு ஆரா என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் குடும்ப புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். 

அதில் புதிதாகப் பிறந்த மகளுடன் யுவராஜும், மகன் ஓரியன் உடன் ஹேசலும் உள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அனைத்துவித கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்தார். பின்னர் இவருக்கும், பாலிவுட் நடிகையுமான ஹேசல் கீச்சிற்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இத்தம்பதிக்கு 2022ஆம் ஆண்டு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT