செய்திகள்

உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிருக்கு தங்கம்

அஜா்பைஜானில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், மகளிருக்கான 50 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.

DIN

அஜா்பைஜானில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், மகளிருக்கான 50 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.

இறுதிச்சுற்றில் தியானா, சாக்ஷி சூா்யவன்ஷி, கிரன்தீப் கௌா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,573 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. சீன அணி (1,567) வெள்ளியும், மங்கோலிய அணி (1,566) வெண்கலமும் வென்றன. அதிலேயே தனிநபா் பிரிவில் தியானா 533 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

50 மீட்டா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் ரவீந்தா் சிங், கமல்ஜீத், விக்ரம் ஷின்டே கூட்டணி 1,646 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றனா். தனிநபா் பிரிவில் ரவீந்தா் சிங் 556 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். டிராப் பிரிவில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான்/மனீஷா கீா் இணை 22-ஆம் இடமும், கினான் செனாய்/பிரீத்தி ரஜக் 24-ஆவது இடமும் பிடித்தனா்.

2-ஆம் இடம்: இப்போட்டியில் இந்தியா மொத்தமாக 6 தங்கம், 8 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது. இப்போட்டியின் மூலம் இந்தியாவுக்கு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4 இடங்கள் உறுதியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT