செய்திகள்

ஆசியக் கோப்பை: சதம் விளாசிய பாபர் அசாம், இஃப்திகார் அகமது; நேபாளத்துக்கு 343 ரன்கள் இலக்கு!

ஆசியக் கோப்பையில் நேபாளத்துக்கு எதிரான முதல் போட்டியில் பாபர் அசாம் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோரின் அசத்தலான சதங்களால் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்துள்ளது. 

DIN

ஆசியக் கோப்பையில் நேபாளத்துக்கு எதிரான முதல் போட்டியில் பாபர் அசாம் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோரின் அசத்தலான சதங்களால் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்துள்ளது. 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட் 30) தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் சமான் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஃபகர் சமான் 14 ரன்களிலும், இமாம்-உல்-ஹக் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின், கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், முகமது ரிஸ்வான் 44 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய அஹா சல்மான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார் இஃப்திகார் அகமது. இந்த இணை அதிரடியாக விளையாடியது. அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இஃப்திகார் அகமது 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.  இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்தது. 

இதையும் படிக்க: வைரஸ் காய்ச்சலால் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர்!
 
நேபாளம் சார்பில் சோம்பால் கமி 2 விக்கெட்டுகளையும், கரண் மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நேபாளம் களமிறங்குகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT