செய்திகள்

ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் கடும் போட்டியாளராக இருக்கும்: அஸ்வின்

ஆசியக் கோப்பையிலும், உலகக் கோப்பையிலும் கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தான் அணி கடும் போட்டியாளராக இருக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

DIN

ஆசியக் கோப்பையிலும், உலகக் கோப்பையிலும் கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தான் அணி கடும் போட்டியாளராக இருக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம் மற்றும்  முகமது ரிஸ்வானின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களால் உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு பாகிஸ்தான் அணி ஆபத்தானதாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது யூடியூப் பக்கத்தில் பேசிய அஸ்வின் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் எனத் தோன்றுகிறது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அவர்களது சிறப்பான தொடர்ந்து வெளிப்படுத்தினால், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாளராக மாறிவிடும். பாகிஸ்தான் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள், அவர்களை ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு கடும் போட்டியாளராக மாற்றியுள்ளது. அவர்களிடம் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களும் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் 90’களின் பிற்பகுதியிலும், 2000 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக இருந்தது. அந்த ஆதிக்கம் கடந்த 5-6 ஆண்டுகளாக  மீண்டும் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் அவர்கள் அதிக அளவிலான டி20 தொடர்களில் விளையாடுகின்றனர். அவர்கள் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள். பிக் பேஸ் லீக் தொடர்களிலும் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றனர் என்றார்.

பாகிஸ்தான் மற்றும்  நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பையின் முதல் போட்டி இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT