விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா ?
ஆசியக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலிருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷான் களமிறங்கவுள்ளார்.
ஆசியக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலிருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷான் களமிறங்கவுள்ளார். ஆனால், அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஆகஸ்ட் 30) தொடங்கியது. இந்திய அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 2) தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. காயத்தினால் அணியில் இடம்பெறாமலிருந்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளது இந்தியாவுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்திய அணியின் கே.எல்.ராகுல் ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
ஆசியக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலிருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷான் களமிறங்கவுள்ளார். ஆனால், அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்குத் திரும்பியுள்ளார். அதனால், அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். அவருடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் களமிறங்குவாரா அல்லது இஷான் கிஷன் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மாவுடன் , இஷான் கிஷன் களமிறங்கினால், ஷுப்மன் கில் 3 இடத்தில் களமிறங்குவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரோஹித் சர்மா-இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் பட்சத்தில், ஷுப்மன் கில் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 5-வது இடத்திலும், ஹார்திக் பாண்டியா 6-வது இடத்திலும் களமிறங்கும் சூழல் ஏற்படலாம். இந்த நிலையில், அணி நிர்வாகம் என்ன முடிவு செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.