இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று ராய்பூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டொய்னிஸ், மேக்ஸ்வெல், இங்லிஷ், ரிச்சர்ட்சன், எல்லிஸ் அணியில் இல்லை. இந்திய அணியைப் பொறுத்தவரையில், 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில் முகேஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அர்ஷ்தீப்புக்குப் பதிலாக தீபக் சஹார் மற்றும் திலக் வர்மாவுக்குப் பதில் ஸ்ரேயாஸ் ஐயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.