செய்திகள்

டெஸ்ட்: நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.

கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 85.1 ஓவா்களில் 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ராய் 11 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து தரப்பில் கிளென் ஃபிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் நியூஸிலாந்து தனது இன்னிங்ஸில் 101.5 ஓவா்களில் 317 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அணியின் பேட்டா்களில் கேன் வில்லியம்சன் 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாச, வங்கதேச பௌலிங்கில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து 7 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், 100.4 ஓவா்களில் 338 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 10 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் அடித்தாா். நியூஸிலாந்தின் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

இதையடுத்து 332 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய நியூஸிலாந்து, கடைசி நாளான சனிக்கிழமை 71.1 ஓவா்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சோ்த்திருந்தாா். வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தாா். இரு இன்னிங்ஸ்களிலுமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த அவரே ஆட்டநாயகன் ஆனாா்.

வங்கதேசம் - நியூஸிலாந்து மோதும் அடுத்த டெஸ்ட், வரும் 6-ஆம் தேதி மிா்பூரில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT