செய்திகள்

மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணையும் சஞ்சய் பங்கார்!

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

DIN

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சஞ்சய் பங்கார் கடந்த 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்துள்ளார். அந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சஞ்சங் பங்கார் செயல்பட்டார். 

இந்த நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சித் தலைவராக சஞ்சய் பங்கார் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக சஞ்சய் பங்கார் பேசியதாவது: நம்மிடம் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து குறைந்த அளவிலான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஐபிஎல் சீசனுக்கு பஞ்சாப் அணிக்கு  சிறந்த ஆதரவை அளித்து அணியை வலுவாக்க வேண்டும் என்பதே தற்போது இருக்கும் சவால் என்றார்.

இந்த ஆண்டு தமிழக வீரர் ஷாருக்கான் உள்பட 5 பேரை பஞ்சாப் கிங்ஸ் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

SCROLL FOR NEXT