செய்திகள்

தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட பயிற்சி தேவை: ரிங்கு சிங்

தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி  தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும்  2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் டி20 தொடர் நாளை (டிசம்பர் 10) தொடங்குகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் தென்னாப்பிரிக்காவின் ஆடுகளத்தில் இன்று பேட் செய்தேன். பந்தின் வேகம் அதிகமாக உள்ளது. அதேபோல பந்துகள் அதிக அளவில் பௌன்சர்களாக வருகின்றன. இந்த ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் என்னுடைய முதல் பயிற்சியில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ராகுல் டிராவிட் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு அறிவுரை கூறினார். ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பயணிக்க கிடைத்த வாய்ப்பு சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது என்றார்.

இந்தியாவில் நடைபெற்ற  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றுவதற்கு ரிங்கு சிங்  தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT