செய்திகள்

முதல் இன்னிங்ஸில் 487 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா; பந்துவீச்சில் அசத்திய அமர் ஜமால்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 487 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 487 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி  முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை அமர் ஜமால் உடைத்தார். அலெக்ஸ் கேரியை 34 ரன்களுக்கு அமர் ஜமால் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 107 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும்  ஒரு சிக்ஸர் அடங்கும். 

இறுதியில் 487 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அமர் ஜமால் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குர்ரம் ஷாசத் 2 விக்கெட்டுகளையும், ஷகீன் அஃப்ரிடி மற்றும்  ஃபஹீம் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டினையும்  கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி தற்போது அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT