கோப்புப் படம் 
செய்திகள்

ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்டார் பிரபல ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ். 

DIN

துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். 

ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹதராபாத் அணி ஏலமெடுத்தது. சிறிது நேரத்திலேயே ஸ்டார்க் இவரது சாதனையை முறியடித்துவிட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் என்ற சாதனை ஸ்டார்க்கிடம் சென்றது. 

இதற்கு முன்பாக சாம் கரண் ரூ.18.50 கோடி, கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு எடுத்ததே அதிகமாக இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT