செய்திகள்

ஐபிஎல் ஏலம்: பாட் கம்மின்ஸ் சாதனையை முறியடித்த ஸ்டார்க்!

DIN

துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். 

ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹதராபாத் அணி ஏலமெடுத்தது.  

இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் கம்மின்ஸை விட அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

இதுவரை ஐபிஎல்-இல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்கள்: 

மிட்செல் ஸ்டார்க்- ரூ. 24.75 கோடி

பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடி 

சாம் கரண் ரூ.17.5 கோடி 

கேமரூன் கிரீன் ரூ.17.50

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT