செய்திகள்

சிஎஸ்கேவில் இணைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட வீரர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்த வீரர்கள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர். 

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்த வீரர்கள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர். 

துபையில் ஐபிஎல் மினி ஏலம் இன்று (டிசம்பர் 19) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கான வீரர்களை ஆர்வத்துடன் ஏலமெடுத்து வருகின்றனர். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிதாக நியூசிலாந்து வீரர்களான டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்தனர். இளம் உத்தர பிரதேச வீரரான சமீர் ரிஸ்வி சிஎஸ்கே அணியால் ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள இந்த வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரச்சின் ரவீந்திரா

முதல் முறையாக ஐபிஎல் விளையாடப் போகிறேன். சிறந்த வீரர்களான மகேந்திர சிங் தோனி, ஜடேஜா ஆகியோர் உள்ள சிஎஸ்கே அணியில் இணையவுள்ளதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் வரவேற்பு, மைதானத்தில் நிலவும் சூழல் குறித்தெல்லாம் நியூசிலாந்து வீரர்கள் நிறைய கூறியுள்ளார்கள். சென்னை ரசிகர்களை நான் நிச்சயம் மகிழ்விப்பேன் என நம்புகிறேன்.

சமீர் ரிஸ்வி

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளது கனவு போல் உள்ளது. என்னால் இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த தருணத்தை உணர சிறிது நேரம் எடுக்கும். சிஎஸ்கேவுக்காக விளையாட ஆவலாக இருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT