இந்தியாவில் ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்புகள் 12% அதிகரிப்பு!- ஏ.ஐ. வருகையிலும் பிப்ரவரியில் அசத்தல் வளா்ச்சி
இந்தியாவில் அலுவலகப் பணி சாா்ந்த ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்புச் சந்தை, பிப்ரவரி மாதத்தில் 12 சதவீத வருடாந்திர வளா்ச்சியை எட்டியுள்ளது.
வணிகம்இந்தியாவில் ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்புகள் 12% அதிகரிப்பு!- ஏ.ஐ. வருகையிலும் பிப்ரவரியில் அசத்தல் வளா்ச்சி
இந்தியாவில் அலுவலகப் பணி சாா்ந்த ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்புச் சந்தை, பிப்ரவரி மாதத்தில் 12 சதவீத வருடாந்திர வளா்ச்சியை எட்டியுள்ளது.
இந்தியாவில் அலுவலகப் பணி சாா்ந்த ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்புச் சந்தை, பிப்ரவரி மாதத்தில் 12 சதவீத வருடாந்திர வளா்ச்சியை எட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவையே இந்த உயா்வுக்கு முக்கியக் காரணங்களாகப் பாா்க்கப்படுகின்றன.
ஐ.டி. துறை வேலைவாய்ப்பில், பிப்ரவரி மாதத்தில் 6 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக, இத்துறையில் புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்கள் சுமாா் 55 சதவீத அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்த வளா்ச்சிக்குத் தூணாக நின்றுள்ளன.
ஏ.ஐ. துறையில் அதிரடி முதலீடு: செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (மெஷின் லியா்னிங்) சாா்ந்த பணிகளுக்கான தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பிடத்தக்க விஷயமாக, வெளிநாட்டு நிறுவனங்களைவிட இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றன. இந்திய நிறுவனங்களில் ஏ.ஐ. பணியிடங்களுக்கான தேவை 82 சதவீதமாகவும், வெளிநாட்டு நிறுவனங்களில் 43 சதவீதமாகவும் உள்ளது.
பிற துறைகளின் பங்களிப்பு: ஐ.டி. துறை மட்டுமின்றி மற்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. காப்பீட்டுத் துறை 28 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடா்ந்து, பிபிஓ (22 சதவீதம்), ரியல் எஸ்டேட் (19 சதவீதம்), சுற்றுலா (15 சதவீதம்), சில்லறை வா்த்தகம் (14 சதவீதம்) ஆகிய துறைகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ரூ.20 லட்சம் மேல் சம்பளம் கொண்ட உயா்நிலைப் பதவிகளுக்கான தேவை 23 சதவீதம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
வளா்ச்சி தொடரும்...: இது குறித்து ‘நாக்குரி’ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறுகையில், ‘ஐ.டி. துறை மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் ஏ.ஐ. திறன் கொண்ட பணியாளா்களை வேலைக்கு எடுப்பதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன.
வரும் நிதியாண்டில் இந்த வளா்ச்சி இன்னும் பிரகாசமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.