செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

DIN

காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

இந்த நிலையில், காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்த ருதுராஜுக்கு விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT